Blogroll

Wednesday, October 27, 2010

NAAN MAHAAN ALLA - IRAGAI POLE SONG LYRICS IN TAMIL



இறகை போலே அலைகிரனே 
உந்தன் பேச்சை கேட்கையிலே 
குழந்தை போலே தவழ்கிறேனே 
உந்தன் பார்வை தீண்டயிலே 
தொலையாமல் தொலைத்தேனே    
உன் கைகள் என்னை தொட்டதும் 
கரையாமல் கரைந்தேனே 
உன் மூச்சு காற்று பட்டதும் 
அநியாய காதல் வந்ததே 
அடங்காத ஆசை தந்ததே 
எனக்குள்ளே எதோ மின்னல் போலே 
தொட்டு சென்றதே
கண்ணோரம் காதல் வந்தால் 
கண்ணீரும் தித்திப்பாகும் 
வேறொன்றும் தேவையில்லை 
நீ மட்டும் போதும் போதும் 
என்னோடு நீயும் வந்தால் 
எல்லாமே கையில் சேரும் 
வேறொன்றும் தேவையில்லை 
நீ மட்டும் போதும் போதும் 
ஓ...
கூட வந்து நீ நிற்பதும் 
கூடு விட்டு நான் செல்வதும் 
தொடருதே தொடருதே நாடகம் 
பாதி மட்டுமே சொல்வதும் 
மீதி நெஞ்சிலே என்பதும் 
புரியுதே புரியுதே காரணம் 
நேரங்கள் தீருதே வேகங்கள் கூடுதே 
பூவே உன் கண்ணுக்குள்ளே பூமி 
பந்து சுத்துதே 

கண்ணோரம் காதல் வந்தால் 
கண்ணீரும் தித்திப்பாகும் 
வேறொன்றும் தேவையில்லை 
நீ மட்டும் போதும் போதும் 
என்னோடு நீயும் வந்தால் 
எல்லாமே கையில் சேரும் 
வேறொன்றும் தேவையில்லை 
நீ மட்டும் போதும் போதும் 
ஓ...
ஹே, என்னானதோ ஏதானதோ 
இல்லாமல் போச்சே தூக்கமும் 
கண்ணே உன்னை காணமல் 
நான் இல்லை ஓ...
என்மீதிலே உன் வாசனை 
எப்போதும் வீச பார்ர்கிறேன்     
அன்பே உன்னை சேராமல் 
வாழ்வில்லை ஓ...
நீ என்னை காண்பதே 
வானவில் போன்றதே 
தூரத்தில் உன்னை கண்டால் 
தூறல் நெஞ்சில் சிந்துதே 
கண்ணோரம் காதல் வந்தால் 
கண்ணீரும் தித்திப்பாகும் 
வேறொன்றும் தேவையில்லை 
நீ மட்டும் போதும் போதும் 
என்னோடு நீயும் வந்தால் 
எல்லாமே கையில் சேரும் 
வேறொன்றும் தேவையில்லை 
நீ மட்டும் போதும் போதும் 
ஓ...










          

0 comments:

Post a Comment