கண்ணிரண்டில் நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
என் உயிரின் உயிரே
என் இரவின் நிலவே
என் அருகில் வரவே
நீ தருவாய் வரமே ஒ ஒ ஒ
ஊருக்குள்ள கோடிபொண்னே யாரையும் நெனைக்கலையே
உந்தன் முகம் பார்த்த பின்னே எதுவும் பிடிக்கலையே
உன்னோடைய பார்வையில என் உடம்பு வேகுதடி
பக்கத்தில நீ இருந்தா என் வயசு நோகுதடி
கண்ணிரண்டில் நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
ஒ ஒ ஏதோ ஒன்னு சொல்ல
என் நெஞ்சுக்குழி தள்ள
நீப்போத்திவச்ச ஆசையெல்லாம்
கண்முன்னே தள்ளாட
கண்ணாமுச்சி ஆட்டம்
என் கண்ணுக்குள்ள ஆட
நீ சொல்லும் சொல்லும் சொல்லை கேட்காமலே
உந்தன் உள்ளம் திண்டாட
உள்ளுக்குள்ள பட படக்க
நெஞ்சிக்குள்ள சிறகடிக்க
கண்ணுரெண்டும் ரெக்கைக்கட்டி மேலே கீழே படபடக்க
பட்டுபூச்சி பட்டாம்பூச்சி ஆனேனே
ஒம்முத்து முத்து பேச்சு
என் சங்கீதமா ஆச்சு
நின்னுபோச்சு எம்மூச்சு
பஞ்சுமெத்தை மேகம்
அது செஞ்சிவச்ச தேகம்
நீ தூரத்துல நின்னாக்கூட
பொங்கிடுதே என் மொகம்
முத்தக்கட்டு மொழி அழகில்
குத்திக்குத்தி கொன்ன வலே
எ சிக்கிக்கிட்ட என் மனசில்
ஊறவச்சி தொவைச்சவலே
ஆத்துக்குள்ள அம்மிக்கல்லா போனேனே
ஊருக்குள்ள கோடிபொண்னே யாரையும் நெனைக்கலையே
உந்தன் முகம் பார்த்த பின்னே எதுவும் பிடிக்கலையே
உன்னோடைய பார்வையில என் உடம்பு வேகுதடி
பக்கத்தில நீ இருந்தா என் வயசு நோகுதடி
கண்ணிரண்டில் நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
என் உயிரின் உயிரே
என் இரவின் நிலவே
என் அருகில் வரவே
நீ தருவாய் வரமே ஒ ஒ ஒ
0 comments:
Post a Comment